புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுப்பது நல்லது தான் என புதுச்சேரி சபாநாயகர் செல்வம் பேட்டி அளித்துள்ளார். அதாவது புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த சரியான சாலை வசதி இல்லை என்பதால் தனியாக மைதானம் போன்ற இடத்தில் விஜய் கூட்டம் நடத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் வரும் 5ஆம் தேதியன்று விஜய் ரோடு ஷோ நடத்துவதற்கு அனுமதிக்கோரி த.வெ.க.வினர் மனு அளித்திருந்த நிலையில், புதுச்சேரி சபாநாயகர் இவ்வாறு கூறியுள்ளதால் தவெகவினர் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
