நொடிக்கு நொடி பரபரப்பு… ஒரே நேரத்தில் தவெகவில் இணைந்த 100 குடும்பத்தினர்… செம குஷியில் விஜய்…!

By Nanthini on மார்கழி 2, 2025

Spread the love

அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இறந்ததிலிருந்து கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. வருகின்ற 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டை வலியுறுத்தி இருந்தார். கட்சியின் உள் விவகாரங்களை பொதுவெளியில் பேசியதால் செங்கோட்டையன் பதவிகள் பறிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைமைக்கு எதிரான அவர்களுடன் தொடர்பில் இருந்த தாக ஒரு மாதத்திற்கு முன்பு கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார். அதன் பிறகு செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியை தீவிர படுத்த அனைத்து நிர்வாகிகளுக்கும் விஜய் உத்தரவிட்டுள்ள. இப்படியான நிலையில் நெல்லை வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மகளிர் அணி அமைப்பாளர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நெல்லை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மகளிர் அமைப்பாளர் சுபர்தனா முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்துள்ளன. ஒரே நேரத்தில் 100 குடும்பங்கள் கட்சியில் இணைந்தது விஜயை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.