திடீர் திருப்பம்..! வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி… 2026 தேர்தலுக்கு புது ரூட்டை கையிலெடுக்கும் பிரேமலதா…!!

By Soundarya on மார்கழி 2, 2025

Spread the love

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதே சம யம் தமிழகத்தில் இந்த முறை கூட்டணி ஆட்சி அமைவதற்கு அதிக சாத்தியங்கள் இருப்பதாகவும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் இதுவரை அரசியலில் நாம் பார்க்காத தேர்தலாக அமையும் என்றும் கூறி வருகின்றார். இதனிடையே சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா, ஜனவரி ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள கடலூர் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறினார். இந்நிலையில் தேமுதிக தொண்டர்களை உயர் பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பதே தனது ஆசை என பிரேமலதா கூறியுள்ளார்.

2026 சட்டமன்ற் தேர்தலில் தொண்டர்கள் விரும்பும் கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்கும் என்று கூறி வரும் அவர், கட்சிக்காக உழைத்த புது முகங்களை வேட்பாளர்களாக களம் இறக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற பிம்பம் உடையும் எனவும் பிரேமலதா நம்புவதாக கூறப்படுகிறது.