ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் முக்கிய திருவிழாக்கள், முக்கிய நிகழ்வுகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த அதிகாரத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கொடுத்துள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் ஒவ்வொரு ஆண்டும் கோட்டாறு பேராலய திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.
இந்த திருவிழாவிற்கு வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இந்த ஆண்டு நாளை இந்த திருவிழா நடைபெற இருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 6ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
