டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் சென்னையை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதி கன மழை வெளுத்து வாங்கி வருகின்றது. அதுமட்டுமல்லாமல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவாரூர் மற்றும் தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இரவு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாளை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு டிசம்பர் 2 நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கன மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
