தமிழகத்தில் திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று அதிக கன மழை காண ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில் இன்று மாலை மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளது.
