திடீர் திருப்பம்… தினகரன், சசிகலாவுக்கு தவெகவில் முக்கிய பதவி… கண்டிஷன் போட்ட செங்கோட்டையன்… கிரீன் சிக்னல் கொடுத்த விஜய்…!

By Nanthini on கார்த்திகை 30, 2025

Spread the love

விஜய் அரசியலுக்குள் நுழைந்து கட்சி வேலைகளை ஆரம்பித்தாலும் அவருக்கு சரியான வழிகாட்டுதல் கொடுக்க யாரும் இல்லை. பல வருடங்களாக தமிழகத்தில் வேரூன்றி இருக்கும் கட்சிகள் அனைத்தும் அதன் தலைவர்கள் வலியை கடைப்பிடித்து வந்தனர். பாடால் விஜய்க்கு எங்கிருந்து ஆரம்பித்து எப்படி செல்ல வேண்டும் என்று வழிகாட்டுவதற்கு யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் சமீபத்தில் கட்சியில் இணைந்தார். இது விஜய்க்கு மிகவும் பக்கபலமாக அமைந்துள்ளது. எப்படி பிரச்சார மேடை இருக்க வேண்டும் என்று தொடங்கி மக்களிடம் நடத்தும் பேச்சு வார்த்தை வரை விஜயின் வலது கையாக அவர்தான் தற்போது இருக்கப் போகிறார்.

கட்சியில் இணைவதற்கு முன்பு அதிமுகவில் இருந்த போது சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். ஆனால் அதற்கு எடப்பாடி ஒத்து வராத நிலையில் தற்போது விஜய் கட்சியில் அவர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று நிபதனை விதித்துள்ளதாக தெரிகிறது. இதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் விஜயும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் விஜயுடன் தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இணைவது ரீதியான செய்தி வெளியாகும் என தெரிகிறது. திமுகவை தாண்டி அதிமுகவிற்கு பெரும் எதிரியாக தமிழக வெற்றிக்கழகம் வளர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது