நடிகை சாய் பல்லவி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ‘தலைவர் 173’ திரைப்படத்தில் சாய் பல்லவி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, பின் அவர் விலகியதை அடுத்து, தற்போது இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கதை மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே சாய் பல்லவி நடிப்பார் என்ற நிலையில், இந்தப் படத்திற்காக அவருக்கு ரூ.15 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்தத் தொகை, நயன்தாரா, த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பளத்தைவிட அதிகம் என்றும் கூறப்படுகிறது.
