‘ஓ ரசிக்கும் சீமானே, ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ உள்ளிட்ட பாடல்களை நம்மில் கேட்காதவர்களும், குமாரி கமலாவின்(91) ஆட்டத்தை ரசிக்காதவர்களும் யாருமே இருக்க முடியாது. 70 வருடங்களுக்கு முன்பே பான் இந்தியா ஸ்டாராக திகழ்ந்த அவர், பராசக்தி, பாவை விளக்கு உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய நடனத்தால் பல மொழிகளில் ரசிகர்களை சம்பாதித்த கமலா, இறுதி காலத்தை அமெரிக்காவில் கழித்த நிலையில் வயது மூப்பின் காரணமாக காலமானார்.
