2026-ல் விஜய்தான் முதலமைச்சராக வருவார் என்று முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க நாளுக்கு நாள் தேர்தல் களமும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு தேர்தல் களமே பரபரப்பாக மாறிவிட்டது. சமீபகாலமாகவே அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் விஜயின் கட்சியில் தொடர்ந்து ஐக்கியம் ஆகிய வருகின்றனர். அந்தவகையில் செங்கோட்டையன் நேற்று விஜய் கட்சியின் இணைந்துள்ளார்.
இந்நிலையில் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் , ‘தவெக வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. என் உயிர் மூச்சு உள்ள வரை தவெகவிற்காக பணியாற்றுவேன். புனிதமான ஆட்சியை விஜய் கொடுப்பர். தவெகவில் ஜனநாயகம் உள்ளது. எம்ஜிஆரின் அண்ணாயிசம்தான் விஜய்யினுடைய கொள்கை’ என்று தெரிவித்தார்.
