பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த 2023 ஆம் வருடம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் கடந்த மூன்று வாரமாக இம்ரான் கானை சந்திக்க அவருடைய சகோதரிகள் முயற்சித்த நிலையில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் இம்ரான் கான் சிறையில் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல் பரவி வந்தது. இம்ரான் கானின் சகோதரிகள் நேற்று சிறைக்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள்.
இதனையடுத்து இம்ரான் கான் சிறையில் இருந்து மாற்றப்பட்டதாக வரும் செய்திகள் எந்த உண்மையையும் இல்லை. அவர் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார் .அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்று சிறை நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை உடனடியாக வெளியிட வேண்டும் என அவரது மகன் காசிம் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
