“பொங்கல் பரிசாக ரூ.5000” கொடுத்தால் மட்டுமே.. என் தொகுதி மக்கள் ஓட்டு போடுவாங்க… புயலை கிளப்பிவிட்ட நயினார் நாகேந்திரன்..!!

By Soundarya on கார்த்திகை 28, 2025

Spread the love
தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பாக  5,000 ரூபாய் ரொக்க பணம் வழங்க வேண்டும் என பாஜக பொதுச்செயலாளர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து  செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “எனது நெல்லை தொகுதியில் முதல்வர் சாலை, பாலம் போன்ற பல நன்மைகளை செய்திருக்கிறார்.
இருந்தாலும் எனது தொகுதி மக்கள் பொங்கல் பரிசு குறித்து பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்” என கூறியுள்ளார். மேலும், அரசு ரூ.1,000 ரூபாயை மட்டும் கொடுத்தால், மக்கள் வாக்களிப்பார்களா? என்பது சந்தேகம் தான் என அவர் தெரிவித்துள்ளார்.