“பணம் சம்பாதிக்க ஆசை…” கதறிய 10-ஆம் வகுப்பு மாணவி…! ஆண் நண்பருடன் சேர்ந்து தாய் செய்த காரியம்…. பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 28, 2025

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் காத்கோபார் கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய 10ஆம் வகுப்பு மாணவியை, அவரது தாயே பணம் சம்பாதிக்கும் ஆசையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாணவியின் தாய், தனது ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து மாணவியைக் கட்டாயப்படுத்தி இந்த விபச்சாரத் தொழிலுக்குத் தள்ளியுள்ளார்.

மாணவி மறுப்பு தெரிவித்தபோதும், அவரது தாய் அடித்துத் துன்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு இது குறித்து அவரது ஆசிரியையிடம் கூறி உதவி கோரவே, ஆசிரியை தொண்டு நிறுவன உதவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் மூன்று பேரிடம் பணம் வாங்கியது தெரியவந்தது.  தற்போது மாணவி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

   

மாணவியின் தாயும் அவருக்கு உடந்தையாக இருந்தவரும் தலைமறைவாக உள்ளனர் என்றும், அவர்களைத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், பலாத்காரம் செய்த நபர்கள் மீதும், தாயார் மற்றும் உடன் இருந்தவர் மீதும் போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.