கேரட் அதன் சுவை, அமைப்பு மற்றும் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக பலரால் விரும்பப்படும் ஒரு காய்கறி. கேரட்டைப் பச்சையாகச் சாப்பிடுவதா அல்லது சமைத்துச் சாப்பிடுவதா என்பதில் ஒரு விவாதம் நிலவுகிறது.
கேரட்டில் உள்ள முக்கியமான ஊட்டச்சத்து பீட்டா கரோட்டின் ஆகும், இது நம் உடலில் வைட்டமின் ஏ ஆக மாறுகிறது. இது கண் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சருமப் பொலிவுக்கு அவசியம். நாம் பச்சையாகக் கேரட்டைச் சாப்பிடும்போது, நம் உடல் அந்த பீட்டா கரோட்டினில் 3-4% மட்டுமே உறிஞ்சுகிறது. ஆனால், சமைத்த கேரட்டில் அதன் உறிஞ்சுதல் அளவு கிட்டத்தட்ட 40% வரை அதிகரிக்கிறது.
இதற்கு காரணம், சமைக்கும் போது ஏற்படும் வெப்பம் கேரட்டின் கடினமான செல் சுவர்களை உடைத்து, பீட்டா கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலால் எளிதாக உறிஞ்சப்பட உதவுகிறது. சமைப்பது ஆன்டி-நியூட்ரியண்ட்கள் எனப்படும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலைத் தடுக்கும் சேர்மங்களையும் குறைக்கிறது. மேலும், வைட்டமின் ஏ ஒரு கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் என்பதால், சமைக்கும் போது ஆலிவ் எண்ணெய் அல்லது நெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளுடன் சேர்ப்பது அதன் உறிஞ்சுதலை இன்னும் மேம்படுத்துகிறது.
இருப்பினும், பச்சையான கேரட்டில் வெப்பத்தால் சேதமடையாத வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது. மேலும், அதன் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. அதிகபட்ச ஆரோக்கிய நன்மைகளுக்காக, கேரட்டை வேகவைத்தோ, வதக்கியோ சமைப்பது அல்லது அதை ஆரோக்கியமான கொழுப்புகளுடன் சேர்ப்பது சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
