தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க நாளுக்கு நாள் தேர்தல் களமும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு தேர்தல் களமே பரபரப்பாக மாறிவிட்டது. சமீபகாலமாகவே அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் விஜயின் கட்சியில் தொடர்ந்து ஐக்கியம் ஆகிய வருகின்றனர். நேற்று செங்கோட்டையன் விஜய் கட்சியின் இணைந்தார். இந்நிலையில் செங்கோட்டையனைத் தொடர்ந்து ஓபிஎஸ்-ம் தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரத்தில் டிச.15 ஆம் தேதி வரை வரை கெடு விதித்துள்ள அவர், தனிக்கட்சி தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது திடீர் திருப்பமாக, அவரும் விஜய் கட்சியில் சேரவிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றன. மேலும் இதுகுறித்து மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை
