ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மதம் முதல் நாளிலிருந்து விரதம் இருந்து ஐயப்பனை வழிபடுவார்கள். சபரிமலைக்கும் செல்வார்கள். இந்நிலையில் மண்டல பூஜைக்காக சபரிமலைக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சென்ற தனியார் பேருந்து ஒன்று இடுக்கி மாவட்டம் குட்டிக்கானம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுமார் 21 பக்தர்கள் காயமடைந்தனர். அவர்களில் 10 பேருக்கு பலத்த காயமடைந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
