செய்தியாளர் சந்திப்பில் தவெக துண்டை தோளில் போட மறுத்த செங்கோட்டையன்… ஷாக் ஆன ஆதவ் அர்ஜுனா… என்ன பதில் சொன்னார் தெரியுமா..?

By Soundarya on கார்த்திகை 27, 2025

Spread the love

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (நவ.27) விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்து கொண்டார். இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா  தவெக கட்சியின் துண்டை செங்கோட்டையன் தோளில் போட்டார். அப்போது  அதை தோளில் இருந்து எடுத்து செங்கோட்டையன் “துண்டு போட்டா கிண்டலடிப்பாங்க” என கூறினார். இதனால் ஆதவ் அர்ஜுனா அதை எடுத்துள்ளார்.

பின்னர் பேசிய அவர், த.வெ.க.வில் நான் இணைந்ததற்கு பல காரணங்கள் உண்டு. திமுகவும், அதிமுகவும் வேறு வேறு அல்ல. ஒன்றாக இணைந்து தான் பயணிக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு மாற்றம்  வேண்டும். பள்ளிக்குழந்தைகள் தங்களது பெற்றோரிடம், “அப்பா, அம்மா, விஜய்க்கு ஓட்டு போடுங்க” என்று கூறும் நிலை தமிழ்நாட்டில் தற்போது உள்ளது. தூய்மையான ஆட்சி நடத்த ஒருவர் தேவை என்பது மக்கள் மனதில் தோன்றிவிட்டது. இளவல் விஜய் இதற்காக மாபெரும் இயக்கத்தை கட்டமைத்திருக்கிறார் என கூறினார்.