கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் முழங்கியது. இந்த கொலை வழக்கில் கைதான சதீஷ்க்கு தூக்கு தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை ஐகோர்ட் சற்றுமுன் தீர்ப்பளித்துள்ளது.
