BREAKING: “வெற்றி நிச்சயம்” நல்லதே நடக்கும்… செங்கோட்டையன் குறித்து விஜய் வெளியிட்ட வீடியோ…!!

By Soundarya on கார்த்திகை 27, 2025

Spread the love

எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் படைத்தளபதியாக பார்க்கப்பட்ட செங்கோட்டையன் இனி விஜயின் படைத்தளபதியாக மாறியுள்ளார். 50 வருடத்திற்கு மேலாக அதிமுகவில் பயணித்த செங்கோட்டையன் அரசியலில் ஆழ அகலத்தை நன்கு அறிந்தவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் விரக்தியில் இருந்த செங்கோட்டையன் தவெகவில் இன்று  இணைந்தார். செங்கோட்டையனுக்கு நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை விஜய் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து  விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  இளம் வயதிலேயே MLA ஆகி MGR-ன் நன்மதிப்பை பெற்றவர்செங்கோட்டையன். எ 50 ஆண்டு கால அரசியல் அனுபவமிக்க அண்ணன் செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருப்பது இக்கட்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன். மேலும், இணைந்து மக்கள் பணியாற்ற செங்கோட்டையனை வரவேற்கிறேன். நல்லதே நடக்கும், நல்லதுதான் நடக்கும். வெற்றி நிச்சயம் எனவும் தெரிவித்துள்ளார்.