அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கூறியதை தொடர்ந்து அவரது கட்சி பதவியை எடப்பாடி பழனிச்சாமி பறித்தார். இருந்தாலும் கட்சி உறுப்பினராக நீடித்து வந்த நிலையில் ஓபிஎஸ் உடன் ஒரே காரில் செங்கோட்டையன் பசும்பொன்னுக்கு சென்றதைத் தொடர்ந்து மொத்தமாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று MLA பதவியை ராஜினாமா செய்தார். இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில், செங்கோட்டையன், சத்யபாமா உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்துள்ளார்கள்.
நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் அமைப்புச் செயலாளராகவும் KAS நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தவெக அலுவலகம் வந்துள்ள செங்கோட்டையன் சட்டைப்பையில் ஜெயலலிதாவின் போட்டோவை வைத்துள்ளார். இதனை பார்த்த அரசியல் வட்டாரங்களோ இதுதான் விசுவாசம் என்று பேசி வருகிறது.
