அடுத்த பரபரப்பு..! தவெகவில் இணையும் ஓபிஎஸ், டிடிவி தினகரன்…? செம குஷியில் விஜய்..!!

By Soundarya on கார்த்திகை 27, 2025

Spread the love

அதிமுகவை ஒன்றிணைக்க பாடுபடுவோம் என்று ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் கூறிவந்த நிலையில்,  செங்கோட்டையனின் கட்சி பதவியை எடப்பாடி பழனிச்சாமி பறித்தார். இருந்தாலும் கட்சி உறுப்பினராக நீடித்து வந்த நிலையில் ஓபிஎஸ் உடன் ஒரே காரில் செங்கோட்டையன் பசும்பொன்னுக்கு சென்றதைத் தொடர்ந்து மொத்தமாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து விரக்தியில் இருந்த செங்கோட்டையன் தவெகவில் இன்று  இணைந்தார்.

மேலும், ஒரு மாதத்தில் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக ஓபிஎஸ் அறிவித்திருக்கிறார். இதற்கிடையில் டிடிவி தினகரனும் விஜய்யுடன் கூட்டணி சேர முனைப்பு காட்டி வருகிறார். இந்த நிலையில், ஓபிஎஸ்-ம், டிடிவியும் விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்புருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.