பாரத சாரண சாரியார் இயக்கத்தின் உயரிய விருதான வெள்ளி யானை விருது அமைச்சர் அன்பில் மகேஷுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் #19thNationalJamboree நிகழ்வில் @bsgnhq இயக்கத்தின் மிக உயரிய விருதுநாய் வெள்ளி யானை விருது எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. சாரணர் இயக்கத்தின் இந்த உயரிய விருதை உத்திரபிரதேச ஆளுநர் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.
மிகப்பெரிய இந்த விருதை மாணவர்களின் நலம் காக்கும் நம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை துண்களான மாணவச் செல்வங்கள் மற்றும் இளைஞர்களுக்கும் பணிவோடு சமர்ப்பிக்கிறேன். அன்பு, மனிதநேயம் மற்றும் ஒழுக்கத்தோடு கூடிய வலிமையான சமுதாயத்தை படைக்க நாம் அனைவரும் ஒன்றிணைத்து உழைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
