உணவில் வாழைத்தண்டு சேர்த்துக் கொள்வது என்பது ஏராளமான நன்மைகளை அளிக்கும். பொதுவாகவே வாழை மரத்தில் அணைத்து பகுதிகளுமே மனிதர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வாழை மரத்தின் இலை சாப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. வாழை இலையில் சாப்பிடுவது பாரம்பரிய செயலாக பார்க்கப்பட்டாலும் அதிக ஆரோக்கியத்தை வழங்குகின்றது. வாழைப்பூ ரத்தத்தினை சுத்திகரிப்பதற்கு உதவுகிறது. வாழை மரத்தின் நடுவே எடுக்கக்கூடிய அதன் தண்டுகள் சிறுநீரக பிரச்சனையை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாழைத்தண்டில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.
நாம் போதுமான அளவு தண்ணீர் பருகாமல் இருந்தால் சிறுநீரகத்தில் தேவையற்ற கழிவுகள் படிவமாக சேர்ந்து கற்களாக உருவாகும். தற்போதைய காலத்தில் பெரியவர்கள் மட்டுமல்லாமல் இளம் வயதினரும் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். சிறுநீரகத்தில் கல் பிரச்சனை உள்ளவர்கள் வாழையின் நடுவே இருக்கும் தண்டில் சிறிதளவு குழி போன்ற அமைப்பை ஏற்படுத்திவிட்டு அதனை கவர் ஒன்றினால் மூடி வைத்துவிட்டு வீட்டிற்கு வந்து விடவும். காலையில் பார்க்கும்போது அந்த குழியில் வாழையின் தண்ணீர் நிரம்பி இருக்கும். அந்த தண்ணீர் கல்லடைப்பு உள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வு அளிக்கும்.
வாழைத்தண்டின் சாரையும் எடுத்துக் கொள்ளலாம். இவையும் சிறுநீரகக் கல் மற்றும் பித்தப்பை கல் ஆகியவற்றை கரைக்க உதவுகிறது. மேலும் உடம்பிலிருந்து நச்சுக்களை வெளியேற்றுவதற்கும் இது உதவுகின்றது. இந்த தண்டில் இருக்கும் பொட்டாசியம் சத்து உடலில் ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. வாழைத்தண்டை பொறியியல், கூட்டு அல்லது ஜூஸ் என பல்வேறு முறைகளில் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏராளமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
