என்னையே சந்தேகப் படுறீயா..? வேலைக்கு சென்றுவிட்டு 10 நாள் கழித்து வீட்டுக்கு வந்த கணவர்… மனைவியும், மாமியாரும் சேர்ந்து செய்த காரியம்… திருவண்ணாமலையை அதிர்ந்து போச்சு..!!

By Soundarya on கார்த்திகை 27, 2025

Spread the love

மனைவி மீது சந்தேகம் கொண்ட லாரி டிரைவரை மனைவி அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு இடையன்குளத்தூர் கிராமம் தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி மகன் விஜய்(27) இவர் அதே ஊரை சேர்ந்த ஷர்மிளா என்பவரை கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது .விஜய் லாரி டிரைவர் என்பதால் வேலைக்கு சென்றால் 10 – 15 நாட்கள் கழித்து தான் வீட்டுக்கு வருவார். அப்போது அக்கம் பக்கத்தினர் பலவிதமாக பேசுவதால் விஜய் மனைவி ஷர்மிளாவை சந்தேகத்தில் அடித்து உதைப்பது வழக்கமாக இருந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று விஜய் மனைவி ஷர்மிளாவுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது ஷர்மிளாவின் அம்மா ராணி பாத்திமா உடன் இருந்துள்ளார். இதில் விஜயை மனைவி ஷர்மிளா மாமியார் ராணி பாத்திமா ஆகியோர் கம்பியால், கட்டையாலும் தாக்கியுள்ளனர் . இதில் விஜயின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் விஜயின் கழுத்தில் கயிறு கட்டி அருகில் உள்ள ஜன்னலில் தொங்க விட்டுள்ளார்கள்.  பின்னர் விஜய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார்கள். அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்கள். விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளார்கள்.  பிறகு இது குறித்து நடந்த விசாரணையில் மனைவி ஷர்மிளா, மாமியார் ராணி பாத்திமா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளார்கள். இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.