உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் திங்கள்கிழமை இரவு இட்டாஞ்சா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் நடந்த திருமணத்தில் கலந்து கொள்ள வந்த ஒரு இளைஞர், மூன்று வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் சந்தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தீப் குழந்தையை மாடிக்கு அழைத்துச் சென்று, அங்கு கொடூரமான குற்றத்தைச் செய்தான். பின்னர், அக்குழந்தையை கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி எறிய முயன்றான்.
ஆனால் சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட விருந்தினர்களும் மற்றவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த நபரை கையும் களவுமாகப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சிறுமியின் குடும்பத்தினரின் புகாரைத் தொடர்ந்து, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்தனர்.
