காலையிலேயே குட் நியூஸ்… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… வந்தது ஹேப்பி நியூஸ்…!

By Nanthini on கார்த்திகை 26, 2025

Spread the love

தமிழகத்தில் பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்களில் அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி கார்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு வருகின்ற டிசம்பர் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் கூடும் இந்த விழாவிற்காக தமிழக அரசு ஏற்கனவே சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 3,4 ஆகிய தேதிகளில் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.