கிழக்கு ஆப்பிரிக்க நாடு எத்தியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள எரிமலை 12000 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக வெடித்து சிதறியுள்ளது. அடிஸ் அபாபிவிலிருந்து 500 மைல் தொலைவில் அமைந்துள்ள ஹைலே குப்பி எரிமலை ஞாயிற்றுக்கிழமையன்று திடீரென வெடித்துள்ளது. இதனால் எரிமலையில் இருந்து பல கிலோமீட்டர் தூரத்திற்கு கரும் புகைகள் வெளியேறி வருகிறது.
⚠️ Ethiopia: The Hayli Gobi volcano erupted today for the first time in ten thousand years and sent ash up to a height of 15 km.🔥🔥 pic.twitter.com/aiPVhhO4rr
— Dr. Fundji Benedict (@Fundji3) November 24, 2025
சாம்பல் மேகங்கள் இந்தியா, ஏமன், ஓமன் மற்றும் வடக்கு பாகிஸ்தானை நோக்கி நகர்ந்து வந்தது. தற்போது டெல்லி வான் பகுதியில் கரும் புகைகள் சூழ்ந்துள்ளது. இந்த கரும்புகை சீனாவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும் இன்று இரவு 7:30 மணிக்குள் முழுமையாக டெல்லியில் இருந்து விலகிச் செல்லும் என்றும் இந்திய வானில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
