தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 25 இன்று முதல் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. அதன்படி காலி பாட்டிலை கொடுத்தால் 10 ரூபாய் திரும்ப கொடுக்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. பொது இடங்கள் மற்றும் சாலைகளில் காலியாக விட்டு செல்வதை தடுக்கும் வகையில் வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்று அருந்திய காலி மது பாட்டில்களை அதே சில்லறை விற்பனை கடைகளில் திரும்ப பெற்றுக் கொள்ளும். முதலில் மது வாங்கும்போது பத்து ரூபாய் கூடுதல் கொடுத்து வாங்கிவிட்டு பிறகு காலி மது பாட்டிலை திரும்ப கொடுத்துவிட்டு பத்து ரூபாயை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
