தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்ற நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இன்று ஏராளமான மாவட்டங்களில் கன மழை பெய்ததன் காரணமாக பல பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கன்னியாகுமரி, ராமநாதபுரம் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நவம்பர் 25, 26, 27 ஆகிய தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும்தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும் அங்கு நியமிக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
