கிருஷ்ணகிரி மாவட்டம் பொச்சம்பள்ளி அருகே உள்ள பர்கூர் என்ற கிராமத்தில், கடந்த சில நாட்களாகவே குழந்தைகள் கதறும் சத்தம் கேட்டுவந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் பீதியில் இருந்தார்கள். இதையடுத்து, சந்தேகம் எழுந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
இந்நிலையில் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் வரதராஜன் என்பவருக்கு சொந்தமான கழிவறையில் இருந்து நீண்ட தலைமுடியுடன், காற்றில் பறந்த கொடூரமானா உருவம் ஒன்று தெரிந்த நிலையில் வெளிச்சம் பட்டதும் மறைவது போன்ற திகில் வீடியோ பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
