தமிழ் சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர்தான் நடிகை மீனா. ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து நடித்தார். இவர் தமிழ் சினிமாவில் 45 வருடங்களை கடந்து பயணம் செய்து வருகிறார். தெலுங்கு, கன்னடம் படங்களிலும் பிசியாக நடித்து வந்தார். இதற்கிடையில் வித்தியாசகர் என்பவரை கடந்த 2009 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கடந்த2022 ஆம் வருடம் வித்யாசாகர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
அதன் பிறகு வெளியில் தலை காட்டாத மீனா தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் இவருடைய இரண்டாம் திருமணம் குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மக்கள் ஏன் தனது திருமணத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள்? என்பது புரியவில்லை. மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். எந்த ஹீரோ விவாகரத்து செய்தாலும் அதை தன்னுடைய திருமணத்துடன் இணைத்து பேசுவதாகவும், அதில் துளி அளவு உண்மையும் இல்லை என்றும் அவர் கூறினார்.
