திருவள்ளுரை சேர்ந்த சதீஷ் என்ற ஆட்டோ ஓட்டுனரின் மனைவி மீனா. இந்த தம்பதிகளுக்கு பவ்யஸ்ரீ (15) என்ற மகளும், 13 வயதில் அரிகரன் என்ற மகனும் இருந்தனர். மகள் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில், ஹரிஹரன் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். மீனாவின் உறவினரான ஆந்திராவை சேர்ந்த நந்தினி என்பவர் பிரசவத்திற்காக சில நாட்களுக்கு முன்பு சதீஷ் வீட்டுக்கு வந்து தங்கி உள்ளார். இதனால் குழந்தைக்காக வீட்டின் மாடியில் உள்ள படுக்கை அறையில் சேலையில் தொட்டில் கட்டப்பட்டிருந்தது. நந்தினி தன்னுடைய சொந்த ஊருக்கு சென்ற பிறகும் குழந்தைக்காக கட்டிய தொட்டியில் கழட்டாமல் அப்படியே இருந்துள்ளது. அதிர் அடிக்கடி ஹரிஹரன் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதனிடையே நேற்று முன்தினம் மாலை சதீஷ் தன்னுடைய மகனை பள்ளியிலிருந்து ஆட்டோவில் அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் சவாரிக்கு சென்றுள்ளார். மீனாவும் அவருடைய மகனும் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்ட நிலையில் ஹரிஹரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல ஹரிகரன் மாடியில் உள்ள அறையில் சேலையால் கட்டிய தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தபோது தொட்டியில் முறுக்கிக்கொண்டு கழுத்தை இறக்கியதால் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளான்.
பிறகு வீடு திரும்பிய மீனா தொட்டிலில் தொங்கியபடி மகன் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
