1 இல்ல 2 இல்ல 6 மாதங்களாக வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த திமுக நிர்வாகி… பெண் பரபரப்பு புகார்…!

By Nanthini on கார்த்திகை 24, 2025

Spread the love

விழுப்புரம் மாவட்டத்தில் திமுக நிர்வாகிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகார் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவாக்கரை பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி பாஸ்கரன் என்பவர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரில், பாஸ்கரன் கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தன்னுடன் நெருக்கமாக இருக்கும்போது எடுத்த காட்சிகளை வீடியோ எடுத்து மிரட்டி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண் அழித்த புகாரியின் அடிப்படையில் பாஸ்கரன் மீது தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் திமுக அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், பாஸ்கரன் தன்னை துன்புறுத்திய போது வீடியோ எடுத்ததாகவும் அந்த வீடியோவை காட்டி தொடர்ந்து மிரட்டியதால் இந்த ஆறு மாத காலத்திற்கும் அவரால் பாலியல் ரீதியான அத்துமீறல்களை செய்ய முடிந்தது என்றும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.