காலையிலேயே பரபரப்பு… இரவோடு இரவாக சீமான் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு…!

By Nanthini on கார்த்திகை 24, 2025

Spread the love

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுவை விற்று நலத்திட்டங்கள் செய்வதை ஏற்க முடியாது. நாம் தமிழர் கட்சி ஆட்சியில் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்படும். புதுச்சேரியில் படிப்படியாக மது கடைகள் குறைக்கப்படும் என்று பேசிய சீமான் மெட்ரோ ரயில் திட்டம் தோல்வியுற்றது என விமர்சித்தார். அப்போது சீமானுக்கு கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது உரிமையில் பேசிய சீமான் திடீரென எழுந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை நாம் தமிழர் கட்சியினர் அங்கிருந்து வெளியேற்றினர். இந்நிலையில் செய்தியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரியில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செய்தியாளரை அவதூறாக பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் ஆதரவாளர்களை வைத்து தாக்கியது என்று மூன்று பிரிவுகளின் கீழ் சீமான் மீதும் அவருடைய ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.