“முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்”… விஜய்யால் என்னைக்குமே எம்ஜிஆர் ஆக முடியாது… பதிலடி கொடுத்த ஜெயக்குமார்…!

By Nanthini on கார்த்திகை 24, 2025

Spread the love

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் மக்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாம் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை பற்றி கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன், வந்தால் என்ன, கட்டாயம் ஆட்சிக்கு வருவோம், மக்கள் நம்மை வர வைப்பார்கள். எல்லோருக்கும் நிரந்தர வீடு, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மோட்டார் சைக்கிள், வேலைவாய்ப்பு என சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதேபோல எம்ஜிஆர் மற்றும் அண்ணா ஆகியோரை விஜய் தொடர்ந்து புகழ்ந்து வருகின்றார். இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. ஒரே சூரியன், ஒரே சந்திரன் போல, ஒரே எம்ஜிஆர் தான். அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. அதேபோல எம்ஜிஆர் இல்லாமல் அரசியல் கிடையாது. எங்கள் தலைவரின் பெயரை விஜய் உச்சரிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான். விஜய் தேர்தல் வாக்குறுதிகள் கொடுப்பது இருக்கட்டும், அதற்கு முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும், பிறகு பார்க்கலாம் என்று விஜய்யை ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.