கனமழை எதிரொலி… பள்ளிகளுக்கு விடுமுறை… தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வந்த அலர்ட்…!

By Nanthini on கார்த்திகை 24, 2025

Spread the love

அந்தமான் கடலில் சென்யார் என்ற புயல் சின்னம் உருவாகி உள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொளியாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக தென்காசி மற்றும் வெள்ளையாகிய மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குமரி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அங்கும் விடுமுறை குறித்த அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகலாம் என தெரிகிறது.