குழந்தை இல்லா தம்பதியிடம் மோசடி செய்த அதிமுக நிர்வாகி நீக்கம்… இபிஎஸ் அதிரடி உத்தரவு..!!

By Soundarya on கார்த்திகை 23, 2025

Spread the love
விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த தம்பதிக் பாதமுத்து-பூண்டி மாதா .  இந்த தம்பதி நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் தவித்து வந்த நிலையில் குழந்தை தத்தெடுத்து தருவதாக சேலம் அதிமுக மாணவர் அணி துணை செயலாளர் அருண்குமார் வரவழைத்துள்ளார். பின்னர் தனது தாய்மாமா வெற்றிவேல் என்பவரை போலி இன்ஸ்பெக்டராக நடிக்க வைத்து அந்த தம்பதியிடம் ரூ.3 லட்சத்தை பறித்துள்ளார்.
இதனையடுத்து இந்த புகாரின் பேரில் அருண்குமார், வெற்றிவேல், பழனிபாரதி, மதுராஜ், ஏசுராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அருண்குமாரை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.