கரூர் சம்பவத்திற்கு பின் மீண்டு வந்த விஜய் கட்சியை வலுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில் தவெக விஜய் இன்று காஞ்சிபுரத்தில் மக்களைச் சந்திக்கிறார். உள்ளரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் கூட்டம் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், மக்கள் அரங்கத்திற்குள் வருகை தந்துள்ளார்கள். அப்போது குழந்தைகளுடன் வந்த பெண்களை நிறுத்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “குழந்தைகளை ஏன் கூட்டிட்டு வந்தீங்க” என்று அவர்களை கண்டித்து அவர்களுக்கான அனுமதியை மறுத்துள்ளார்.
