மகாராஷ்டிரா மாநிலத்தில், 22 வயதான பெண் ஒருவர் தனக்கு பிறந்து 20 நாட்களே ஆன குழந்தையை ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பெண்ணுக்கு திருமணமான நிலையில் நவ.17 ஆம் தேதியன்று குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு குழந்தை மாயமானதாக போலீசில் புகார் அளித்தார்.
பின்னர், இதுகுறித்த போலீஸ் விசாரணையில் குழந்தையை ஆற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து, ஆற்றில் வீசப்பட்ட குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் சுதந்திரமாக வாழ விரும்பியதால் இச்செயலை செய்ததாக கூறிய நிலையில் அப்பெண் கைது செய்யப்பட்டார்.
