இலங்கையில் நடக்கும் பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியானது இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனையை படைத்துள்ளது. முதல் முறையாக நடத்தப்படும் இந்த தொடரின், அரையிறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய 20 ஓவர்களில் 109 ரன்களை எடுத்தது. இதனையடுத்து ஆடிய இந்திய அணி 11.5 ஓவர்களிலேயே இலக்கை துரத்தி அபார வெற்றி பெற்றது.
