உத்திர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு பள்ளி மாணவன் பள்ளிக்கு ஓடும்போது வழுக்கி விழுந்து ஒரு டாக்ஸி மோதி உயிர் தப்பிய அதிர்ச்சி காட்சி சிசிடிவியில் பதிவாகி, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், குழந்தை தனது சகோதரியுடன் சொசைட்டி கேட் நோக்கி ஓடுவதைக் காட்டுகிறது, அப்போது திடீரென அவர் வழுக்கி விழுந்தார்.
ग्रेटर नोएडा वेस्ट में लापरवाह कैब ड्राइवर की ड्राइविंग से दर्दनाक हादसा, अजनारा होम्स सोसाइटी में दौड़ रहे एक छात्र को अचानक ठोकर लगी और वह सड़क पर गिर गया, पीछे से तेज़ी से आ रही कैब ने छात्र को कुचल दिया, छात्र की हालत गंभीर बताई जा रही है। @noidapolice @DCPCentralNoida… pic.twitter.com/HB4AEL36BI
— Now Noida (@NowNoida) November 22, 2025
அப்போது டாக்ஸியின் முன் சக்கரம் அவர் மீது ஏறியது, ஆனால் சிறுவன் பலத்த காயமின்றி உயிர் தப்பினார். முன்னால் சென்று கொண்டிருந்த அவரின் சகோதரி டாக்ஸியை விரைவாக நிறுத்திய போது சிறுவன் காரின் கீழிருந்து வெளியே வந்தார். இந்த சம்பவத்தை பார்த்ததும் அங்கிருந்த பலரும் ஓடி வந்தார்கள். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
