சேனைக்கிழங்கு புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் கொண்டுள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
1. எடை குறைப்பு: இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகும்.
2. கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு: இதில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
3. மன அழுத்த நிவாரணம்: வைட்டமின் ஏ, இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை அளித்து, மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.
4. மூல நோய் நிவாரணம்: மூல நோய் உள்ளவர்களுக்கு மலம் கழிக்கும் போது ஏற்படும் சிரமம், எரிச்சல் மற்றும் வலி போன்றவற்றைக் குறைக்க, உணவில் சேனைக்கிழங்கை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
5. எலும்பு ஆரோக்கியம்: இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் வயதான காலத்தில் ஏற்படும் மூட்டு வலி, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகளைக் குறைத்து, எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன.
6. பெண்கள் ஆரோக்கியம்: மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு மற்றும் கை கால் வலிக்கு இது அருமருந்தாகச் செயல்படுகிறது. மேலும், மாதவிடாய் ஒழுங்காக வரவும், இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கிறது. 40 வயதிற்குப் பிறகு பெண்கள் சந்திக்கும் உடல் ரீதியான பல பிரச்சனைகளுக்கு இந்த கிழங்கு வரப்பிரசாதமாகும்.
7. சேனைக்கிழங்கு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், நெஞ்செரிச்சல், குடல் புண் மற்றும் வயிற்றுப் புண்களை ஆற்றவும் உதவுகிறது.
இது குளிர்ச்சித் தன்மையுடையது என்பதால், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஆஸ்துமா, சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது.
