BREAKING: காலையிலேயே பரபரப்பான சென்னை… துப்பாக்கிச்சூடு… உச்சக்கட்ட பதற்றம்…!

By Nanthini on கார்த்திகை 22, 2025

Spread the love

சென்னையில் இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி விஜயகுமாரை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். சென்னை இந்திராநகர் ரயில் நிலையம் அருகே நண்பர்களுடன் பதுங்கி இருந்த விஜயகுமாரை கைது செய்ய சென்றபோது போலீசார் தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்காப்புக்காக விஜயகுமாரை காலில் சுட்டு பிடித்த போலீசார் அவருடைய கூட்டாளியான கௌதம் மற்றும் நிரஞ்சன் ஆகியோரையும் கைது செய்துள்ளனர். இதனால் காலையிலேயே சென்னையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.