தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, அதிமுகவினர் தங்களது கூட்டணியை பலப்படுத்த பல வியூகங்களை வகுத்து வருகின்றன. இம்முறை அதிமுக, திமுக, தவெக மற்றும் நாதக என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில் அரசியல் கட்சியினர் மாறி மாறி விமர்சித்து வருகிறார்கள். அந்தவகையில் நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் CM ஆக ஆசைப்படுவதாக பிரேமலதா கூறியது விஜய்யை தான் என கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த விஷயத்தில் திடீர் திருப்பமாக, தான் கூறியது விஜய்யை அல்ல என பிரேமலதா விளக்கமளித்துள்ளார். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்களை தாங்கள் கூத்தாடி என கூறவில்லை எனவும் விஜய்க்கு நாங்க எப்போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
