நடிகர் சியான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில், தென் மாவட்டக் கபடி வீரர் மணத்தி கணேசனின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ‘பைசன்’ படத்தில் நடித்தார். இந்தப் படத்திற்காக இரண்டு வருடங்களுக்கு மேலாகத் துருவ் கடுமையான பயிற்சி மேற்கொண்டார்.
‘பைசன்’ திரைப்படம் வெளியாகி, துருவின் உழைப்புக்குப் பெரும் பாராட்டுகள் கிடைத்ததுடன், படம் பல திரையரங்குகளில் 50 நாட்களுக்கு மேலும் ஓடி, 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதனால், துருவ் விக்ரம் அடுத்து யாருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் வெற்றி பெற்ற இந்தி ஆக்ஷன் படமான ‘கில்’ (Kill) படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் நடிக்கவுள்ளதாகச் செய்தி வெளியானது. ஆனால், அந்த ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் கதையைத் தேர்வு செய்தபோது, இயக்குநர் மாரி செல்வராஜ், “பைசன் போன்ற நல்ல கதையில் நடித்துவிட்டு, உடனே இது போன்ற ஆக்ஷன் கதைகளில் நடிக்க வேண்டாம்” என்று அறிவுறுத்தியதால், அந்த ரீமேக்கில் நடிக்கப் போவதில்லை என்று துருவ் முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.
