“அடச்சீ பேத்தி வயசு இருக்க பொண்ண இப்படியா?”… தினமும் ஆடு மேய்க்கச் சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்… 65 வயது முதியவர் செய்த அருவருப்பான செயல்…!

By Nanthini on கார்த்திகை 21, 2025

Spread the love

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் இயலாமையை 65 வயது முதியவர் பயன்படுத்திக்கொண்ட ஒரு மோசமான சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. மதுரை அலங்காநல்லூர் அருகே ஆடுகள் மேய்ப்பதற்காக சென்ற மனநலம் சரியில்லாத பெண்ணை கர்ப்பம் ஆக்கிய 65 வயது முதியவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மனநலம் சரியில்லாத 24 வயதுடைய பெண் ஒருவர் தினமும் மழை அடிவார பகுதியில் உறவினர் ஒருவருடன் ஆடு மேய்த்து வருவது வழக்கம். அதே பகுதியில் உடும்பன் என்ற ஆறுமுகம் (65) வசித்து வருகின்றார்.

இதனிடையே திடீரென்று அந்த மனநலம் சரியில்லாத பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டு உள்ளார். இதனால் பெற்றோர் அந்த பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்தப் பெண் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர் உடனே போலீசில் புகார் அளித்தனர்.

   

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் உடும்பன் என்ற ஆறுமுகம் தான் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்ந்து ஏமாற்றி பலமுறை உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. தங்களுடைய உறவினர் என்ற நம்பிக்கையுடன் ஆடுகள் மேய்க்க உடன் சென்ற மனநலம் சரியில்லாத பெண்ணை ஏமாற்றி கர்ப்பம் ஆக்கிய காமக்கொடூரனை போலீசார் தற்போது கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.