பிணவறையில் திடீரென அசைந்த சடலத்தின் கால்கள்… பதறிய பெண் ஊழியர்…. காண்போரை பதைபதைக்க வைக்கும் திக் திக் வீடியோ…!

By Nanthini on கார்த்திகை 21, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதில் ஒரு சில வீடியோக்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாகவே இறப்பு மற்றும் பயம் ஒன்றாக கலந்திடும் பிணவறையில் வேலை செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அங்கு இருக்கும் ஊழியர்களின் மனதை உருக்கும் சம்பவங்கள் பெரும்பாலும் வெளிச்சத்திற்கு வராதபோதும் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பிணவறையில் பணியாற்றும் பெண் ஊழியர், பாதி குளிர்சாதன பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த சடலத்தின் அருகே நின்று குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது திடீரென்று அந்த சடலத்தின் கால்கள் அசைந்தது போல காட்சிகள் பதிவாகியுள்ளது. முதலில் அது கண்களின் மாயை என்றே ஊழியர் நினைத்தாலும் அந்த காட்சி சிசிடிவி-யில் தெளிவாகவே பதிவாகியுள்ளது. பிறகு இது சமூக ஊடகங்களில் 15 வினாடி வீடியோவாக பரவி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அதை அமானுஷ்யம் என்று கூறி வருகின்றனர். ஆனால் சில நிபுணர்கள் மனிதன் இறந்த சிரம் மணி நேரங்களில் உடல் தசைகள் தளர்வதால் கை, கால்கள் மற்றும் கண்ணிமைகள் அசைவது என்பது சாதாரணமான விஷயம் தான் என்று விளக்கம் அளித்தனர். தற்போது இந்த வீடியோ பார்ப்பவர்களை ஒரு நொடி அதிர்ச்சியில் உறைய வைப்பதாக உள்ளது.