பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ஹார்தோய் மாவட்டம் சண்டிலா பகுதியில் உள்ள லயன்ஸ் பப்ளிக் பள்ளியில் இன்று காலை 10 மணி அளவில் திடீரென்று விஷவாயு பரவியுள்ளது. அதன் தாக்கத்தால் குழந்தைகள் இருமல், மயக்கம் மற்றும் வாந்தி ஆகியவற்றால் அடுத்தடுத்து அவதிப்பட தொடங்கினர்.
சில நிமிடங்களிலேயே 20 முதல் 30 மாணவர்கள் உடல்நல குறைவால் கீழே மயங்கி விழுந்ததால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ச்சி மயக்கம் ஏற்பட்டதை கண்டு ஆசிரியர்கள் குழந்தைகளை உடனடியாக பள்ளியிலிருந்து வெளியேற்றினர். பிறகு ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தைகள் அனைவரும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். உடனே இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் வகுப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு குழந்தை கழிப்பறைக்குள் ஒரு பொருளை வீசியது. அதுவே பள்ளி முழுவதும் பரவிய கடுமையான வாயு உருவாக காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் போலீஸ் ஆர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
