BREAKING: விஜய்க்கு சற்றுமுன் பெரும் அதிர்ச்சி… திடீர் அறிவிப்பால் கலக்கத்தில் தொண்டர்கள்…!

By Nanthini on கார்த்திகை 20, 2025

Spread the love

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு அரசியல் ரீதியாக பல சிக்கல்களை சந்தித்து வருகின்றார். இருந்தாலும் தனது கட்சியை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் விஜய் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதற்கான பணிகளை கையில் எடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்ள போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. அன்றைய நாளில் திருவண்ணாமலை தீபம் நடைபெற உள்ளதால் பரப்புரைக்கு அனுமதி தர இயலாது என்று கூறப்பட்டுள்ளது. டிசம்பர் 6 சனிக்கிழமை அன்று பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் அன்றும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என போலீஸ்காரத்தில் கூறப்பட்டுள்ளது. கடைசியாக செப்டம்பர் 27 இல் கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் பரப்புரையை தொடங்க உள்ளதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.