ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஷாக்… இனி இவர்களுக்கு எந்த பொருளும் கிடைக்காது… அரசு முக்கிய அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 20, 2025

Spread the love

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு மட்டுமே அரசு சார்பில் அனைத்து நிதி உதவிகளும் வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதே சமயம் ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு செயல்படுத்தி வரும் நிதி உதவிகளும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தான் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இலவசம் மற்றும் மானிய விலையில் ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெறுவதற்கு இனி ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை e-Kyc செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறையை மேரா ரேஷன் மற்றும் ஆதார் பேஸ் ஆர்டி செயலிகள் மூலம் வீட்டிலிருந்தே செய்யலாம். ரேஷன் சலுகைகள் சரியான பயனாளிகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.